HomeNewsLatest Newsஎன்னை வெகு அழகாக காட்டியது சுகுமார் தான் – ஒளிப்பதிவாளர் சுகுமாரைப் பாராட்டிய நாகர்ஜுனா!!

என்னை வெகு அழகாக காட்டியது சுகுமார் தான் – ஒளிப்பதிவாளர் சுகுமாரைப் பாராட்டிய நாகர்ஜுனா!!

ஒளிப்பதிவாளர் சுகுமார் ஸ்டில் போட்டோகிராபராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். மின்சாரகனவு, மின்னலே, சாமுராய், கிங்க் போன்ற பல படங்களில் போட்டோகிராபாரக பணிபுரிந்துள்ளார். இவரது திறமையை கண்டு இயக்குநர் பிரபு சாலமன் இவரை தன் லாடம் படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகப்படுத்தினார்.

 லாடம் படத்தினைத் தொடர்ந்து கும்கி, மான் கராத்தே, தர்மதுரை, விஜய்யின் பைரவா முதலாக பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.

https://youtu.be/yXxEcnDuruQ

படங்களில் இவரது ஒளியமைப்பு, இவரது காட்சியமைப்பு தனித்தன்மை வாய்ந்ததாக எல்லோரும் பாராட்டக் கூடியதாக உள்ளது. இவரது  ஒளிப்பதிவின்  தனித்தன்மை இவரை மொழிகடந்து    சென்று சேர்த்துள்ளது. தற்போது இவருக்கு தெலுங்கு ,மலையாளம்,  ஹிந்தி மொழிகளீலும் வாய்ப்புகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளது.

 

தெலுங்கில் நாகர்ஜீனாவுடன் இவர் பணிபுரிந்த ‘மனமதடு2’ படத்தின் பத்திரிகை சந்திப்பில் நாகர்ஜுனா இவரை பெருவாறு புகழ்ந்து பேசினார். தான் இதுவரை நடித்த படங்களில் தன்னை வெகு அழகாக காட்டியது சுகுமார் தான் எனக் கூறியுள்ளார். திரையுலகில் 33 வருடங்களாக சினிமாவில் சூப்பர் ஸ்டாராக  கோலோச்சி வரும் நடிகர் தன்னை இவ்வாறு பாராட்டியது, தன்னை வெகுவாக உற்சாகப்படுத்தியுள்ளதாக சுகுமார் தெரிவித்துள்ளார்.

POST TAGS:
FOLLOW US ON:

fridaycinemaa@gmail.com

Rate This Article:
NO COMMENTS

LEAVE A COMMENT