HomeNewsLatest Newsகதாசிரியருக்கு தமிழ் சினிமாவில் மதிப்பே இல்லை.

கதாசிரியருக்கு தமிழ் சினிமாவில் மதிப்பே இல்லை.

கதாசிரியருக்கு தமிழ் சினிமாவில் மதிப்பே இல்லை.

சில நாட்கள் முன் கலைஞானம் அவர்களின் பாராட்டு விழா சென்னையில் பாரதிராஜா தலைமையில் நடந்தது.
தமிழ்ப்படங்களில் வில்லனாக நடித்துக்கொண்டிருந்த ரஜினியை “பைரவி” படத்தின் மூலம் முதல் முறையாக ஹீரோவாக்கியவர் கலைஞானம்.

 

 

கலைஞானம் திரையுலகிற்கு வந்து 50 ஆண்டுகள் கடந்துவிட்டன. இதனை பெருமைப்படுத்தும் நோக்கில் பாரதிராஜா தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழக அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கலைஞானத்தைப் பெருமைப்படுத்தினார்.

1980 -90களில் தமிழ்த் திரையுலகில் பல படங்களில் பணியாற்றியவர் கலைஞானம். கதாசிரியர், இயக்குநர், பாடலாசிரியர், வசனகர்த்தா மற்றும் தயாரிப்பாளர் என இவருக்கு பன்முகத்திறமைகள் உண்டு. இயக்குநர்கள் பாரதிராஜா, எஸ்.பி.முத்துராமன் உள்ளிட்ட பல இயக்குநர்களுக்கு நெருங்கிய நண்பராகவும் வலம் வந்தவர்.சினிமா துறையில் அரை நூற்றாண்டை கடந்த தன் அனுபவங்களை ஒளிவு மறைவின்றி இவர் எழுதிய, ‘சினிமா சீக்ரெட்’ மூன்று பாகங்களாக புத்தக வடிவில் வெளி வந்துள்ளது. இவருக்குள் இருந்த திரைஞானம் தான் பாலகிருஷ்ணன் என்ற பெயரில் இருந்த இவரை கலைஞானமாக மாற்றியது.பல படங்களுக்கு இவர் மூலக்கதையை உருவாக்கி தந்துள்ளார்.

எழுத்தாளர் பாலகுமாரன் இயக்கத்தில் உருவான ‘இது நம்ம ஆளு’ படத்தில் பாக்யராஜ், இவரை ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார்.

இவரைப் பாராட்டி நடந்த விழாவில் ரஜினி, சிவக்குமார், வைரமுத்து கே ஆர் விஜயா, பாக்கியராஜ், கங்கை அமரன் உட்பட பலரும் கலந்து கொண்டனர். இது கலைஞானம் விழாவா அல்ல ரஜினிகாந்த் பாராட்டு விழாவா என்கிற சந்தேகம் வருமளவு கலந்து கொண்ட அனைவரும் ரஜினியை பாராட்டி பேசினர்.

மேடையேறிய அமைச்சர் முதற்கொண்டு கலைஞானம் ரஜினியை எப்படி சூப்பர் ஸ்டாராக்கினார் என்றே பேசினாரக்ள் மேலும் ரஜினியின் புகழ பாட ஆரம்பிக்க தலைமை வகித்த பாரதிராஜா ரஜினி அரசியலுக்கு வருமுன் அவருக்கு ஒரு பாராட்டு விழா எடுத்து விட வேண்டும் என்ற விருப்பம் தெரிவித்தார். ஏனென்றால் அரசியலுக்கு வந்துவிட்டால் தானும் ரஜினியும் எதிரெதிர் அணியில் இருக்க வேண்டிய நிலை வரும் என்றார். அடுத்து மேடையேறிய பாக்கியராஜ் தன் திரைக்கதை குரு கலைஞானம் என்றார். அவர் பங்குக்கு அவரது ஆசான் பாரதிராஜாவுக்கு தமிழக அரசு பாராட்டு விழா நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

நடிகர் சிவக்குமார் வழக்கம் போல் என்றாலும் அருமையாக கலைஞானம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துப்பேசினார். தியேட்டரில் முறுக்கு வித்த கதையிலிருந்து, தன் பெண்டாட்டி நகையை அடகு வைத்து ரஜினிக்கு அவர் அட்வாண்ஸ் கொடுத்த கதை வரை சுவாரஸ்ய பேச்சாக அவரது பேச்சு அமைந்தது.

இறுதியாக கலைஞானம் இப்போது வரை வாடகை வீட்டில் வசிப்பதை குறிப்பிட்டு அதை மாற்ற அரசுக்கு கோரிக்கை வைத்தார்.

இறுதியாக இவ்விழாவில் பேசிய ரஜினிகாந்த் ….
அரசுக்கு அந்த வாய்ப்பை வழங்க மாட்டேன் அவரது கடைசி மூச்சு என் வீட்டில் போக வேண்டும் அவருக்கு வீடு பாருங்கள் என பாக்கியராஜுக்கு கட்டளை இட்டார்.
மேலும் அழுதால் தான் தாயே பால் தருவாள் ஆனால் கலைஞானம் எப்போதும் சிரித்துக் கொண்டே நல்லா இருக்கேன் என்று சொல்வார். இது என் தப்பு தான் நான் அவரிடம் முன்பே கேட்டிருக்க வேண்டும் என்றார். மேலும்
தமிழ் சினிமாவில் நடிகருக்கு இருக்கும் முக்கியத்துவம் கதாசிரியருக்கு இருப்பதில்லை. ஒரு படத்தின் ஆத்மாவே அவர்கள் தான் ஆனால் அவர்களுக்கான மரியாதை பொருளாதார அளவிலும், மதிப்பளவிலும் நடிப்பவர்களுக்கு சமமாக இருப்பதில்லை.

இந்த நிலை நாடக உலகம் இயங்கிய ஆரம்ப காலம் முதலே இருக்கிறது. அப்போது புராணங்கள் மட்டுமே நாடகமாக அரங்கேறியது. அதனால் கதை என யாருக்கும் மேடையில் மரியாதை தரப்படவில்லை. வசனகர்த்தா மட்டுமே இருந்தார்கள். பின் சமூக நாடகங்கள் வந்த போதிலும் உண்மை நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டிருந்தததால் அவைகளிலும் வசனம் மட்டுமே பெயர் போடப்பட்டது. இந்தப்பழக்கம் இப்போது வரை தொடர்வது வேதனை. சரித்திர சாதனை செய்த கலைஞானம் போன்றோர் இதனால் மதிக்கப்படாமலே இருக்கிறார்கள். “பாட்ஷா” படத்தை பற்றி இப்போதும் எங்கு போனாலும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் பாட்ஷாவின் மூலக்கதை யாருடையது என்பது யாருக்கும் தெரியாது. நாம அதை தெரிந்து வைத்து கொள்வதில்லை. தமிழ் சினிமாவில் மூலக்கதை எழுதும் ஆசிரியருக்கு மதிப்பு தரவேண்டும். டைட்டில் கார்டில் தாயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு இணையாக கதாசிரியருக்கு இனிமேல் மதிப்பு தர வேண்டும் என்று பேசினார்.

fridaycinemaa@gmail.com

Rate This Article:
NO COMMENTS

LEAVE A COMMENT