‘காற்றின் மொழி’ படத்திற்கு குழந்தைகளை அழைத்துச் சென்ற சூர்யா நற்பணி இயக்கத்தினர்

இரண்டு வாரங்களுக்கு முன்பு ஜோதிகா நடிப்பில் வெளியான படம் ‘காற்றின் மொழி’ . அன்றிலிருந்து தொடர்ந்து மக்களின் ஆதரவையும், பாராட்டையும் பெற்றது. குடும்பங்கள் கொண்டாடும் படமாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
மேலும், இப்படத்தின் தயாரிப்பாளரான தனஞ்செயன் இப்படத்திற்கான டிக்கெட் தொகையில் ஒரு பகுதியை கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்படும் என்று அறிவித்தார்.
இந்நிலையில், ஓசூரை சேர்ந்த சூர்யா நற்பணி இயக்கத்தின் சார்பாக அங்குள்ள அனாதை ஆசிரமம் மூலமாக குழந்தைகளை ‘காற்றின் மொழி’ படத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அதைப் புகைப்படத்துடன் ட்விட்டரில் பதிவேற்றமும் செய்துள்ளனர்.
ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா, விதார்த் நடிப்பில் உருவான இப்படத்தின் பத்திரிகையாளர்களுக்கான பிரத்யேக காட்சி திரையிடப்பட்டது. அப்போதே அனைத்துப் பத்திரிகையாளர்களின் பாராட்டையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.