HomeNewsLatest Newsகோடைவிடுமுறையில் குழந்தைகளையும் இளைஞர்களையும் மகிழ்விக்க வருகிறது S3 பிக்சர்ஸ் ‘ஜாம்பி’ – இயக்குநர் புவன் நல்லான்

கோடைவிடுமுறையில் குழந்தைகளையும் இளைஞர்களையும் மகிழ்விக்க வருகிறது S3 பிக்சர்ஸ் ‘ஜாம்பி’ – இயக்குநர் புவன் நல்லான்

இப்படத்தில், ஜாம்பியை நகைச்சுவையோடு வெளிப்படுத்தி இருக்கிறோம். இதில், யோகி பாபு, யாஷிகா ஆனந்த், கோபி சுதாகர், டி.எம்.கார்த்திக், மனோபாலா, அன்புதாசன், பிஜிலி ரமேஷ், ராமர், ‘லொள்ளு சபா’ மனோகர், சித்ரா அக்கா இவர்கள் அனைவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். திகில் நிறைந்த படமாகவும், அதே சமயம் நகைச்சுவையும் கலந்த திரைப்படமாகவும் இருக்கும். இப்படம் ஒரு இரவில், ரிசார்ட் ஒன்றில் நடக்கும் சம்பவங்களை கொண்டு அமைந்திருக்கும். ரிசார்ட்டில் இருந்து எப்படி தப்பித்து வருகிறார்கள் என்பதுதான் இப்படத்தின் கதை.

இப்படத்திற்கு புதுமையான முகங்களும் அதே சமயம், சமூக வலைத்தளம் மற்றும் யூடியூப் பிரபலமாக இருப்பவர்களை தேர்ந்தெடுத்து இப்படத்தில் நடிக்க வைத்திருக்கிறோம். அவர்களும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாகவும், நன்றாகவும் நடித்து இருக்கிறார்கள்.

இப்படம் நகைச்சுவையான வண்ணமயமான படம் என்பதாலும், ஒரு பார்ட்டி பாடல் இருப்பதாலும் பிரேம்ஜி பொருத்தமாக இருப்பார் என்று அவரை தேர்வு செய்தோம். அவரும் நன்றாக நடித்திருக்கிறார். பின்னணி இசை நிறைய இருப்பதால், பிரேம்ஜிக்கு, அவருடைய திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பாக இருக்கும்.

இசையமைப்பாளருக்கு பாடல் சுலபமாக இருந்தாலும் பின்னணி இசை சவாலாகவே இருக்கும். விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இரவில் நடக்கும் கதை என்பதால் அதற்கேற்ப சிறப்பாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார். S3 பிக்சர்ஸ் சார்பில் வசந்த் மகலிங்கம் மற்றும் முத்துக்குமார் இருவரும் இப்படத்தை தயாரித்திருக்கிறார்கள். கதைக்கு என்ன தேவையோ அதை முன்பே பேசி திட்டமிட்டு எடுக்கப்பட்டிருக்கு.

ஜாம்பி என்றாலே குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் ஆர்வம் மிகுதியாக இருக்கும். ஆகையால், இப்படத்தை கோடை விடுமுறையில் வெளியிட முடிவு செய்திருக்கிறோம் என்றார்.

பிஜிலி ரமேஷ் பேசும்போது,

என் வாழ்வில் ‘ஜாம்பி’ ஒரு முக்கியமான படமாக இருக்கும். இயக்குநர், தயாரிப்பாளர்கள், நடிகர், நடிகைகள், ஒளிப்பதிவாளர், சண்டை பயிற்சியாளர், மற்றும் ஒட்டுமொத்த குழுவுடன் பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது. இப்படத்தில் ‘பேட்ட பிலிப்ஸ்’ என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். யோகிபாபு எனக்கு நிறைய விஷயங்களைக் கற்றுக் கொடுத்தார். இவ்வாறு பிஜிலி ரமேஷ் பேசினார்.

தயாரிப்பாளர் வசந்த் மகாலிங்கம் பேசும்போது,

‘வேலைக்காரன்’-ல் தயாரிப்பு பணியில் இருந்தேன். ‘சீமராஜா’வில் முத்துக்குமாருடன் நட்பு ஏற்பட்டது. அப்போதே இருவரும் சேர்ந்து தயாரிக்க வேண்டும் என்று முடிவெடுத்தோம். சரியான குழுவும், கதையும் எங்கள் பட்ஜெட்டிற்குள் அமைய வேண்டும். அதுவரை பொறுத்திருந்தோம். இப்படத்தில் நிறைவேறியது.

நாங்கள் திட்டமிட்டபடி படம் நன்றாக வந்துள்ளது. யோகிபாபு எங்களுக்கு உறுதுணையாக , ஈடுபாட்டுடன் நடித்து கொடுத்திருக்கிறார்.

மே மாத முதல் வாரத்தில் டீஸர் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம் என்றார்.

FOLLOW US ON:
“Kids and teens wi
Thevarattam Movie Pr
Rate This Article:
NO COMMENTS

LEAVE A COMMENT