HomeNewsLatest Newsதமிழ் சினிமாவால் நிராகரிக்கப்பட்ட நயந்தாரா !!

தமிழ் சினிமாவால் நிராகரிக்கப்பட்ட நயந்தாரா !!

தமிழ் சினிமாவால் நிராகரிக்கப்பட்ட நயந்தாரா !!

இன்றைக்கு தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுகிறார் நயந்தாரா. தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 14 வருடங்களை கடந்தும் முன்னணி ஹிரோயினாக கோலோச்சுகிறார். எத்தனையோ ஹிரோயின்கள் காணாமல் போனாலும் அவர் நிலைத்து நிற்கிறார்.

 

இன்றைய முன்னணி ஹீரோக்களின் முதல் சாய்ஸ் அவர் தான். அதிமட்டுமில்லாமல் தனி ஹீரோயினாக அவர் நடிக்கும் படங்களும் வசூலில் ஹீரோ படங்களுக்கு இணையாக வசூலாகிறது. தனக்கென தனி மார்க்கெட் உள்ள நம்பர் 1 தென்னிந்திய நடிகையாக விளங்குகிறார் நயந்தாரா.

இப்படி புகழின் உச்சியில் இருக்கும் நயந்தாரா ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவால் நிராகரிக்கப்பட்டவர் என்பது பலரும் அறிந்திராத செய்தி.

2005 ல் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த ஐயா படம் தான் அவர் தமிழில் அறிமுகமான முதல் படம். ஆனால் அதற்கு முன்னதாகவே தமிழில் ஒரு படத்தில் அவர் ஆடிசன் செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்டுள்ளார்.

2004 ஆம் ஆண்டில் தனுஷ் நடிப்பில் இயக்குநர் ரமணா இயக்கத்தில் வெளிவந்த சுள்ளான் படத்திற்க்காக நயந்தாரா சென்னை வந்தார். கோயெம்பேடு பஸ் நிலயத்தில் தன் பெற்றோருடன் பஸ்சில் வந்திறங்கினார் நயந்தாரா. அவரது மேனேஜர் அஜித் அவரை சுள்ளான் ஃபோட்டோ சூட்டுக்கு அழைத்து வந்தார்.

சுள்ளான் பட ஃபோட்டோ செஷன் இளங்கோ கலர் லேப்பில் நடைபெற்றது. பலவிதமாக எடுக்கபட்ட போட்டோவில் இயக்குநருக்கு திருப்தி இல்லாததால் நிராகரிக்கப்பட்டார் நயந்தாரா.

இதனால் பெரிதும் மனமுடைந்த நயந்தாரா கோபத்தில் நான் இனி தமிழ்நாட்டுக்கே வர மாட்டேன் எனக் கூற மேனேஜர் அஜித் இது ஆடிசன் தான் சில நேரம் இப்படி நடக்கத்தான் செய்யும் என ஆறுதல் கூறி அனுப்பினார். அதற்கடுத்த ஆண்டு கவிதாலயா நிறுவனம் தயாரித்த ஐயா படம் மூலம் தமிழில் அறிமுகமானார் நயந்தாரா. அப்போது அப்படத்திற்க்காக எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது. அதன் பின் அவருக்கு ஏறுமுகம் தான். இன்றுவரை அசைக்க முடியாத நட்சத்திரமாக விளங்குகிறார்.

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் அவரை வேண்டாம் என மறுத்த இயக்குநர் ரமணா கவிதாலயா எடுத்த திருமலை படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர். அதே கவிதாலயா நிறுவனம் எடுத்த ஐயா படத்தில் டைரக்டர் ஹரியால் நயந்தாரா அறிமுகமானார்.அதன்பிறகு ‘சந்திரமுகி’, ‘கஜினி’, தெலுங்கில் ‘லக்‌ஷ்மி’ என தொடர் வெற்றியில் பயணித்தார்.

FOLLOW US ON:

fridaycinemaa@gmail.com

Rate This Article:
NO COMMENTS

LEAVE A COMMENT