HomeNewsLatest Newsபிரபல பின்னணி பாடகி M.S.ராஜேஸ்வரி தனது 87 வயதில் காலமானார்

பிரபல பின்னணி பாடகி M.S.ராஜேஸ்வரி தனது 87 வயதில் காலமானார்

இவருக்கென்று ஒரு தனி குரல் சிறப்பு உண்டு , தனது 25 வயதில் குழந்தைகளுக்கு பாட ஆரம்பித்தார்.”அம்மாவும் நீயே அப்பாவும் நீயே ” என்ற உலக நாயகன் கமல் ஹாசன் குழந்தையாக அறிமுகமான அந்த படத்தில் பாடியவர் .”சிட்டு குருவி சிட்டு குருவி சேதி தெரியுமா ” பாடலை பாடியவர் .”மியோவ் மியோவ் பூனைக்குட்டி வீட்டை சுற்றும் பூனைக்குட்டி ” பாடலை பாடி தனது 35வது வயதில் கூட குழந்தைகளுக்கு பாடினார் .”கோழி ஒரு கூட்டிலே சேவல் ஒரு கூட்டிலே ” என்று குழந்தை குமாரி பத்மினிக்காக “குழந்தையின் தெய்வம்” படத்தில் 1965வருடத்தில் பாடியவர் .மணிரத்னம் இயக்கிய “நாயகன் ” படத்தில் “நான் சிரித்தால் தீபாவளி” இதில் ஜமுனாராணியுடன் M.S.ராஜேஸ்வரியும் பாடினார் . மனிதர்கள் இரக்கலாம் ஆனால் குரல்கள் கானத்தில் உலவிக்கொண்டே இருக்கும் அதில் ஒரு மிகபெரிய குரல் M.S.ராஜேஸ்வரி.

MRChandhramouli Audi

fridaycinemaa@gmail.com

Rate This Article:
NO COMMENTS

LEAVE A COMMENT