மதுரையில் ரசிகர்களை சந்தித்த சூர்யா !
மதுரையில் ரசிகர்களை சந்தித்த சூர்யா !
சூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் செப்டம்பர் 20ம் தேதி திரைக்கு வரவுள்ளது“காப்பான்” திரைப்படம்.
சூர்யா தற்போது சூரரைப்போற்று படத்தில் சுதா கொங்குரா இயக்கத்தில் மதுரையை சுற்றிய பகுதிகளில் நடித்து வருகிறார். அங்கே தனது மிக நீண்ட வருடங்களுக்குப் பிறகு நேரில் சந்தித்துள்ளார்.
சூர்யா , கே.வி.ஆனந்த் மூன்றாவது முறையாக இணைந்துள்ள காப்பான் படம் ரிலீஸிற்கு தயாராகியுள்ளது. சூர்யா இப்படத்தில் சிறப்பு பாதுகாப்புக் குழு அதிகாரியாக நடித்துள்ளார். மோகன்லால் பிரதம மந்திரியாகவும், ஆர்யா பிரதம மந்திரியின் மகனாகவும் நடித்துள்ளார்.
படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது, ஆண்டனி எடிட்டிங் செய்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
இப்படத்தை தொடர்ந்து “சூரரைப் போற்று” படத்தில் சூர்யா நடித்து வருகிறார். 2D Entertainment சார்பில் சூர்யா இப்படத்தினை தயாரிக்கிறார். இறுதிச்சுற்று படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சுதா கொங்குரா இயக்கத்தில் மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி நாயகியாக நடிக்கிறார். ஜாக்கி ஷெராஃப், கருணாஸ், மோகன் பாபு முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். ஹாலிவுட் படங்களுக்கு சண்டைக்காட்சிகள் அமைத்துள்ள George powell இப்படத்திற்கு சண்டைக்காட்சிகள் அமைக்கிறார். ஜீவி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
இதன் படபிடிப்பு மதுரையை சுற்றி உள்ள பகுதிகளில் ஒரு மாதம் நடைபெறுகிறது. இதில் சூர்யா கலந்துகொண்டு நடித்துவருகிறார்.
மதுரைக்கு சூர்யா ஷூட்டிங் வந்துள்ளதை அறிந்த அவரது ரசிகர்கள் ஷூட்டிங் நடக்கும் இடத்தில் அவரைக்காண குவிந்தனர். தினமும் கூட்டம் கூட்டமாக பல ஊர்களிலிருந்தும் அவரைக்காண குவிந்து வந்தனர். பிதாமகன் படப்பிடிப்பிற்கு பின் நீண்ட காலம் கழித்து அவர் இந்த பகுதிக்கு வந்திருப்பதால் அவரை நேரில் காணும் ஆர்வத்தில் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.
சூர்யா ரசிகர் மன்ற அமைப்பின் மூலம் சூர்யாவின் தீவிர ரசிகர்கள் அவரை நேரில் சந்திக்கவும், அவருடன் புகைப்படம் எடுத்தும்
கொள்ளவும் கோரிக்கை வைக்கப்பட்டது. ரசிகர்களின் அன்பை ஏற்று ஒரு தனியார் அரங்கில் 800க்கும் மேற்பட்ட ரசிகர்களை சந்தித்தார் சூர்யா.
ரசிர்களிடம் உரையாடிபோது…
பிதாமகனுக்கு பிறகு உங்களை சந்தித்திருக்கிறேன்.
குறைந்த கால அவகாசத்தில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது ஆனாலும் 800க்கும் மேற்பட்டவர்கள் வந்தது மகிழ்ச்சி. அடுத்தமுறை உங்கள் அனைவரையும் குடும்பத்துடன் சந்திக்கிறேன்.
காப்பான் படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகிறது.
சூரரரைப் போற்று படம் ஷீட்டிங் முடியவுள்ளது. இது ஒரு புதிய முயற்சி, உங்களை மகிழ்விக்கும் என்றார்.
ரசிகர்கள் அனைவருடனும் உரையாடி புகைப்படம் எடுத்துக்கொண்டு அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார் சூர்யா.