HomeNewsLatest Newsமதுரையை கலக்கும் சிங்கங்கள் !! ரசிகர்கள் கொண்டாட்டம்.

மதுரையை கலக்கும் சிங்கங்கள் !! ரசிகர்கள் கொண்டாட்டம்.

மதுரையை கலக்கும் சிங்கங்கள் !!
ரசிகர்கள் கொண்டாட்டம்.

தமிழின் முன்னணி நடிகர்களாக விளங்கும் சகோதரர்கள் சூர்யா, கார்த்தி இருவரும் ஒரே நேரத்தில் தற்போது மதுரையில் ஷீட்டிங்கில் கலந்து கொண்டுள்ளனர். இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் செப்டம்பர் 20ம் தேதி திரைக்கு வரவுள்ளது“காப்பான்” திரைப்படம்.

கே.வி.ஆனந்த் – சூர்யா மூன்றாவது முறையாக இணைந்துள்ள காப்பான் படம் ரிலீஸிற்கு தயாராகியுள்ளது. சூர்யா இப்படத்தில் சிறப்பு பாதுகாப்புக் குழு அதிகாரியாக நடித்துள்ளார். மோகன்லால் பிரதம மந்திரியாகவும், ஆர்யா பிரதம மந்திரியின் மகனாகவும் நடித்துள்ளார்.

 

படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது, ஆண்டனி எடிட்டிங் செய்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தை தொடர்ந்து “சூரரைப் போற்று” படத்தில் சூர்யா நடித்து வருகிறார். 2D Entertainment சார்பில் சூர்யா இப்படத்தினை தயாரிக்கிறார். இறுதிச்சுற்று படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சுதா கொங்குரா இயக்கத்தில் மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி நாயகியாக நடிக்கிறார். ஜாக்கி ஷெராஃப், கருணாஸ், மோகன் பாபு முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். ஹாலிவுட் படங்களுக்கு சண்டைக்காட்சிகள் அமைத்துள்ள George powell இப்படத்திற்கு சண்டைக்காட்சிகள் அமைக்கிறார். ஜீவி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
இதன் படபிடிப்பு மதுரையை சுற்றி உள்ள பகுதிகளில் ஒரு மாதம் நடைபெறுகிறது. இதில் சூர்யா கலந்துகொண்டு நடித்துவருகிறார். அதே போல் அவரது தம்பி கார்த்தியும் பெயரிடப்படாத “கார்த்தி19” புதிய படத்திற்க்காக மதுரை திண்டுக்கல்லில் நடித்து வருகிறார்.

“ரெமோ” படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இப்படத்தினை இயக்கி வருகிறார். இப்படத்தில் கார்த்திக்கிற்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தானா நடிக்கிறார். மதுரையை சுற்றிய பகுதிகளில் 40நாட்கள் இதன் படபிடிப்பு நடைபெறும்.

அண்ணன் தம்பிகளான சூர்யா கார்த்தி இருவரும் மிகச்சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் வேளையில் இருவரும் ஒரே நேரத்தில் மதுரையை சுற்றிய பகுதிகளில் படப்பிடிப்பில் ஈடுபட்டிருப்பது பெரும் ஆச்சர்யமே! சூர்யா, கார்த்தி இருவரும் தங்கள் பகுதிகளில் படப்டிப்பில் இருப்பதை மதுரை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். மேலும் ரசிகர்கள் தினமும் படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் அவர்களை காண கூட்டம் கூட்டமாக குவிந்து வருகிறார்கள்.

நடிகர் கார்த்தி மாநகரம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “கைதி” படத்தில் நடித்து முடித்துள்ளார். சாம்.CSன் இசையும், சத்தியன் சூரியனின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளது. இப்படத்திற்கு பிலோமின் ராஜ் எடிட்டிங் செய்துள்ளார்.

மேலும் இப்படத்தில் கார்த்தியுடன் இணைத்து அஞ்சாதே படத்தின் கதாநாயகன் நரேன், யோகிபாபு, ஜார்ஜ் மரியான், ரமணா, தீனா, வாட்சன் சக்கரவர்த்தி, மகாநதி ஷங்கர், பொன்வண்ணன், தலைவாசல் விஜய் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை Dream Warrior Pictures சார்பாக S.R. பிரகாஷ் பாபு, SR.பிரபு தயாரித்துள்ளனர். இப்படத்தின் போஸ்டர் இந்த வருடம் மார்ச் மாதம் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியது. அதைத்தொடர்ந்து இப்படத்தின் டீசரும் ரசிகர்களிடம் நல்ல பாராட்டுக்களை பெற்றது. இப்படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Dharmaprabhu Movie s

fridaycinemaa@gmail.com

Rate This Article:
NO COMMENTS

LEAVE A COMMENT