HomeNewsLatest Newsரஜினி அரசியலுக்கு வந்தால் எதிர் எதிரே இருக்கவேண்டிவரும்..

ரஜினி அரசியலுக்கு வந்தால் எதிர் எதிரே இருக்கவேண்டிவரும்..

#ரஜினி அரசியலுக்கு வந்தால் எதிர் எதிரே இருக்கவேண்டிவரும்.. #பாரதிராஜா பேச்சு.. #bharathiraja #rajinikanth

மேலும் ரஜினியின் புகழ பாட ஆரம்பிக்க தலைமை வகித்த பாரதிராஜா ரஜினி அரசியலுக்கு வருமுன் அவருக்கு ஒரு பாராட்டு விழா எடுத்து விட வேண்டும் என்ற விருப்பம் தெரிவித்தார். ஏனென்றால் அரசியலுக்கு வந்துவிட்டால் தானும் ரஜினியும் எதிரெதிர் அணியில் இருக்க வேண்டிய நிலை வரும் என்றார். அடுத்து மேடையேறிய பாக்கியராஜ் தன் திரைக்கதை குரு கலைஞானம் என்றார். அவர் பங்குக்கு அவரது ஆசான் பாரதிராஜாவுக்கு தமிழக அரசு பாராட்டு விழா நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

நடிகர் சிவக்குமார் வழக்கம் போல் என்றாலும் அருமையாக கலைஞானம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துப்பேசினார். தியேட்டரில் முறுக்கு வித்த கதையிலிருந்து, தன் பெண்டாட்டி நகையை அடகு வைத்து ரஜினிக்கு அவர் அட்வாண்ஸ் கொடுத்த கதை வரை சுவாரஸ்ய பேச்சாக அவரது பேச்சு அமைந்தது.

இறுதியாக கலைஞானம் இப்போது வரை வாடகை வீட்டில் வசிப்பதை குறிப்பிட்டு அதை மாற்ற அரசுக்கு கோரிக்கை வைத்தார்.

fridaycinemaa@gmail.com

Rate This Article:
NO COMMENTS

LEAVE A COMMENT