HomeTamilவரலட்சுமி என் நெருங்கிய தோழி , நான் அழுதது , சிரித்தது என்று எல்லாவற்றையும் பார்த்துள்ளார் – விஷால்

வரலட்சுமி என் நெருங்கிய தோழி , நான் அழுதது , சிரித்தது என்று எல்லாவற்றையும் பார்த்துள்ளார் – விஷால்

துப்பறிவாளன் படத்தில் டிடெக்டிவ்.இரும்பு திரையுல் இராணுவ அதிகாரியாக நடித்துள்ளேன்.அதில் கோவத்தை வெளிக்காட்டாமல் இருக்கும் கதாப்பாத்திரம்,இதில் சமூக பிரச்சனைகளை கோவத்தின் மூலம் வொளிப்படையாக காட்டும் கதாப்பாத்திரம்.இந்த படத்தில் இருக்கும் கதாப்பாத்திரம் அனைவருக்கும் தெரிந்த மற்றும் சந்தித்த கதாப்பாத்திரமாக இருக்கும்.துப்பறிவாளன் கதாப்பாத்திரத்தை எல்லோருமே பார்த்திருக்க மாட்டோம்.இரும்பு திரை கதாப்பாத்திரம் அனைவருக்கும் நெருக்கமானது.தமிழ் திரைத்துறை நன்மைக்காக சில போரட்டங்களுக்கு பின் சில நிபந்தனைகள் மேற்கொள்ள பட்டுள்ளது.இதற்கு முன் எப்படி வருடத்திற்கு மூன்று படங்கள் கொடுத்தேனோ அப்படியே இனிமேல் கொடுப்பேன்.ஒரு இக்கட்டான கால கட்டத்தில் திரைதுறையை காப்பாற்றவே நினைத்தேன்.படத்தில் நடித்திருந்தால் சம்பாதித்து இருந்திருப்பேன்.இதனால் எனக்கு கோடிகள் தான் இழப்பு.தயாரிப்பாளராக என் சொந்த வாழ்கையை இழந்தேன்.குடும்பத்தோடும்,நண்பர்களோடும் நேரத்தை ஒதுக்க என்னால் முடியவில்லை.

தமிழ் திரைதுறைக்காக நான் மேற்கொண்ட விஷியம் எனக்கு நானே தோல் தட்டி பாராட்டிக்கொள்வதே தவிர மற்றவர்கள் பாராட்ட வேண்டியதில்லை.பாராட்டுக்களை நான் காதில் வாங்கியது இல்லை,என்னை பற்றி வரும் விமர்சனங்களை பற்றி நான் கவலை பட்டது இல்லை.நடிகர் விஜய் அவர்களை ஆரம்ப கட்டத்திலிருந்து பார்த்து இருக்கிறேன் அவரை பற்றி வந்த தரக்குறைவான அனைத்து விமர்சனங்களையும் அவர் தாங்கி முன்னுக்கு வந்துள்ளார் அதுவே எனக்கு ஒரு உத்வேகமாக இருந்தது.பைரசியை விளம்பர படுத்த விரும்பவில்லை.ஆப்ரேட்டர் ரூமில் வைத்து எடுத்தார்கள் தற்போது பட்டன் கேமரா மூலம் எடுக்கிறார்கள் அதுவும் ஒழிக்கப்படும்.ஆறு மாதத்தில் தமிழ் சினிமா மாறப்போகிறது.இப்போது யாரும் திருட்டு வீசிடி வாங்குவதில்லை.பொதுவா படபிடிப்பு நேரத்தில் யாரும் என்னை தொந்தரவு செய்ய மாட்டார்கள்.மாலை ஆறு மணிக்கு மேலே நான் மொபைலை பார்த்து யார் யார் போன் பண்ணிருக்காங்கன்னு பார்த்து பேசுவேன் 6 முதல் 9 வரை நான் இயக்குநரின் நடிகன்தான்.விரைவில் இயக்குநராவேன் அதுதான் என் ஆசையும்.கமல்,ரஜினி அரசியலுக்கு வருவது சந்தோஷம் தான் புதிய மனிதர்கள் நல்லது செய்வார்கள் என எதிர் பார்க்கிறேன்.அவர்கள் அதை அப்படியே மேற்கொள்ள வேண்டும் என்ற பயம் இருக்கிறது.

நான் எதிர்காலத்தில் அரசியல் வந்தால் இவர்களை எதிர்பேனா என்று தெரியவில்லை ஆனால் அவர்கள் சொன்னதை செய்வார்களா என்ற பயம் இருக்கிறது.தேர்தலில் நேர்மை இருக்க வேண்டும்.சூழ்நிலை இருந்தால் வேட்பாளராக இருப்பேன்.என்னை ஆர்.கே நகரில் என்னை வேட்பாளராக நிக்க விடாமல் செய்தது பெரிய தெம்பை கொடுத்தது.என்னை பார்த்து பயப்படுகிறார்கள் என புரிந்தது.கீயுப் நிறுவனம் சம்பாதித்தது போதும் என நினைக்கிறோம்.இருபதாயிரம் கொடுக்க வேண்டிய இடத்தில் பத்தாயிரம் கொடுக்க வேண்டியிருக்கிறது அது சிறிய தயாரிப்பாளர்களுக்கு வட பிரசாதம் தான்.ஆன்லைன் டிக்கெட் ஒரு நபருக்கு 30 ரூபாய் அதனுடன் ஜி.எஸ்.டி சேர்த்து அதிகமாக வசூலிக்கபட்டுள்ளது.அது தாயாரிப்பாளருக்கு லாபம் தரவே இல்லை.நல்லது நடக்க கூடாது என நினைப்பதினால் தான் ஏழு வருடம் பின் தங்கியுள்ளோம்.என் மீது திணிக்கபட்ட பொறுப்பை பெரியவர்கள் ஏற்று செய்திருக்கலாம்.என்னை விலை பேசினார்கள் நான் விலை போகவில்லை அதனால் தான் வெற்றி பெற்றோம்.பெப்சி தொழிலாளர்கள் மீது எனக்கு எப்பவுமே கரிசனம் உண்டு.

படபிடிப்பை தயாரிப்பாளரால் மட்டுமே நிருத்த முடியும்.பேட்டாக்காக சம்பந்தமே இல்லாமல் செய்த போராட்டத்திற்கு பதிலடி கொடுக்கவே அந்த வேலை நிருத்த போராட்டம்.பெப்சிக்காக சங்கத்தில் இருந்து கொடுக்க வில்லை தனிப்பட முறையில் கொடுத்தது.நான் பத்து இலட்சம் கொடுத்தேன்.பிரபு பத்து இலட்சம் கொடுத்தார்.அஜித் அவர்கள் ஒரு முறை கலைஞர் ஐயா முன்னாடி கூறினார் ஏன் எங்களை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டும் என மிரட்டுகிறீர்கள் அது தனிபட்ட விஷியம் என்றார் அது போல தான் பல போராட்டங்களுக்கு நாங்கள் வர சொல்லி யாரையும் கட்டாய படுத்தவில்லை அது அவரவர் விருப்பம்.அனைத்து நடிகர்,நடிகைககளும் நல்ல நண்பர்களே.நடிகர்களின் சம்பளத்தில் கை வைக்காமல் ஒவ்வொரு நடிகருக்கும் அவர் நடிக்கும் படத்தின் இலாப நஷ்ட பட்டியலை அனுப்ப வேண்டும் அதற்கேற்ப சம்பளம் நடிகர்ளே சுதாரித்துக் கொள்வார்கள். இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் பிரச்சனை என்றால் கௌதம் மேனன் விலகி கொள்வார்.தாயாரிப்பாளருக்கும் நடிகருக்கும் பிரச்சனை என்றால் நானும் பிரகாஷ் ராஜீம் விலகிக்கொள்வார் என நாங்கள் பேசியது.நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பின்னே நான் திருமணம் செய்து கொள்வேன்.

ஒருவர் ஒரு பதவியில் முப்பது ஆண்டுகள் இருந்தார். சில திருத்தம் இருந்தது இறங்கினோம் அவரை தாண்டி வெற்றி பெற முடியாது என சொன்னார்கள் அவரும் மனுஷன் தானே என்று போட்டியிட்டோம் கொட்ட வார்த்தையால் விமர்சித்தார்கள் எங்களுக்கு தெரியாத கெட்ட வார்த்தையா காலேஜில் நாங்க போசாததா நாங்களும் பேசினோம் அது ஒரு கட்டத்தில் முற்றியது அதை தாண்டி வெற்றி பெற்றோம்.வாக்குறுதி படி செய்தோம்.அஜித் சங்க கூட்டத்திற்கு வரவில்லை என்றால் அது அவர் தனிப்பட்ட விஷயம்.அவர் அவருக்கென ஒரு தனி சட்டம் வைத்து வாழ்கிறார் அதை நான் அழித்து விட்டு வாங்க என்று நான் கூற கூடாது எனக்கே இசை வெளியீட்டு விழாக்கு செல்ல பிடிக்காது.அவர் நடிகர் சங்கத்துக்கு எதிராக இல்லை வந்தால் யானை பலம் தான்.வரலெட்சுமி என் நெருங்கிய தோழி.நான் அழுதது சிரித்தது எல்லாம் பார்த்த தோழி.என் எட்டு வருட சிறந்த நினைவில் அவர் இருக்கிறார்.

Exclusive Interview
Samantha EXCLUSIVE p

fridaycinemaa@gmail.com

Rate This Article:
NO COMMENTS

LEAVE A COMMENT