HomeTamilவிஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் AGS-ன் தயாரிப்பில் உருவாகவிருக்கும் புதிய படத்திற்கு தளபதி63 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கிறது !

விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் AGS-ன் தயாரிப்பில் உருவாகவிருக்கும் புதிய படத்திற்கு தளபதி63 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கிறது !

விஜய் நடிப்பில் தீபாவளியன்று வெளியாகி பல சர்ச்சைக்கிடையிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் சர்க்கார். இந்நிலையில், AGS-ன் புதிய படைப்பான அடுத்த படத்தில் விஜய் நடிக்கவிருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இப்படத்திற்கு #தளபதி63 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கிறது.

இப்படத்தை அட்லி இயக்குகிறார். ஏற்கனவே அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த ‘தெறி’, ‘மெர்சல்’ இரு படங்களும் மாபெரும் வெற்றியடைந்தது. அதேபோல், இப்படமும் வெற்றியடைந்து மூன்று முறை தொடர் சாதனை புரியும் என்று நம்புகிறோம்.

அதுமட்டுமில்லாமல், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பது இப்படத்திற்கு கூடுதல் பலம். விஜய், அட்லி மற்றும் ஏ.ஆர்.ரகுமான் மூவர் கூட்டணியில் இணைவதில் AGS பெருமைக் கொள்கிறது.

முக்கிய பிரபலங்கள் மற்றும் உயர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டு குடும்பத்தோடு கண்டுகளிக்கும் வகையில் இப்படம் உருவாகும்.

தொழில்நுட்ப கலைஞர்கள் :- ஒளிப்பதிவு – ஜி.கே.விஷ்ணு, கலை – முத்துராஜ், படத்தொகுப்பு – ரூபன் எல்.ஆண்டனி, சண்டைப்பயிற்சி – அனல் அரசு, பாடல்கள் – விவேக், தயாரிப்பு நிர்வாகம் – எஸ்.எம்.வெங்கட் மாணிக்கம், கிரியேட்டிவ் புரொடியூசர் – அர்ச்சனா கல்பாத்தி மற்றும் தயாரிப்பு – கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ்.சுரேஷ்.

மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களைப் பற்றிய தகவல் விரைவில் அறிவிக்கப்படும்.

இவ்வாறு தயாரிப்பு குழுவினரால் அறிவிக்கப்பட்டது.

Kaatrin Mozhi Movie
Rate This Article:
NO COMMENTS

LEAVE A COMMENT