HomeTamilஸ்டாலின் மகன் உதயநிதி நாயகனாக நடிக்க – நாயகியாக ஜெயலலிதா இன்ஸ்பிரேஷனில் தமன்னா. இயக்குனர் சீனு ராமசாமி தகவல்.

ஸ்டாலின் மகன் உதயநிதி நாயகனாக நடிக்க – நாயகியாக ஜெயலலிதா இன்ஸ்பிரேஷனில் தமன்னா. இயக்குனர் சீனு ராமசாமி தகவல்.

இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா, வடிவுக்கரசி  நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கண்ணே கலைமானே’ ரெட் ஜெயன்ட் மூவிஸ் நடிக்கும் இந்த படத்திற்கு  யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் இம்மாதம் 22ஆம் தேதி தமிழகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில் இன்று படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் இயக்குனர் சீனுராமசாமி நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிகைகள் தமன்னா  வடிவுக்கரசி இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில்  இயக்குநர் சீனுராமசாமி பேசுகையில்,

தர்மதுரை க்கு பின்பு சரியான ஒரு படத்தை அமைக்க என்னால் முடியவில்லை யாரையுமே என்னால் கன்வின்ஸ் பண்ண முடியவில்லை. சரியாக சொல்லவேண்டும் என்றால் தர்மதுரை அவ்வளவு பெரிய வெற்றி பெற்ற பிறகும் என்னை ஒரு சப்பாணியாக தான் பார்த்தார்கள். ஆனால் ஒரே ஒரு ஆள் மட்டும் என்னை கோபால் என்று அழைத்தார். கோபால் மட்டுமல்ல கோபால் சார் என்று அழைத்தார் அவர் வேறு யாருமல்ல மக்கள் செல்வன் விஜய் சேதுபதிதான். அவர் என்னை தேடி வந்தது மனிதன் என்ற படம் பண்ண வேண்டும் என்றார் அதற்கான கதையை நான் தயார் செய்து கொண்டிருந்தேன் அப்போது விஜய் சேதுபதி  பிஸியாக இருந்ததால் சிறிது காலம் காத்திருந்தோம். எப்படி தென்மேற்கு பருவக்காற்று படம் முடிந்த பிறகு இரண்டு ஆண்டுகள் காத்திருந்த   நேரத்தில் எனக்கு நீர்ப்பறவை வாய்ப்பு கொடுத்தார்களோ , அதேபோன்று தற்போது உதயநிதி ஸ்டாலின் என்னை அழைத்து இந்த வாய்ப்பை எனக்கு அளித்தார். 

இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக இல்லாமல் கதையின் நாயகன் ஆகவே மிக இயல்பாக நடித்து இருக்கிறார். அவர் ஒரே ஒரு விஷயம் மட்டும் விருப்பப்பட்டு என்னிடம் கேட்டார். படத்தில் குத்து சாங் ஒன்று செகண்ட் ஆப் ல கண்டிப்பாக வேண்டும் என்றார் . அது என்னால் வைக்க முடியாமல் போனது ஏனென்றால் கதை அப்படிப்பட்ட கதை . அவரை கன்வின்ஸ் பண்ண என்னால் முடியவில்லை ஒரு கட்டத்தில் அவரிடம் பேரறிஞர் அண்ணா பேசும்போது சில்க் ஸ்மிதா ஆடினால் எப்படி இருக்கும் அப்படித்தான் இந்த படத்தில் குத்து சாங் வைத்தால் இருக்கும் என்று கூறினேன் அதற்கு மேல் அவர் பேசவில்லை.

பெண் கதாபாத்திரங்களை மையமாக கொண்ட கதையில் கதாநாயகனாக நடிக்கிறேன் என்று கூறிய உதயநிதி ஸ்டாலினின் பெருந்தன்மையை நான் பாராட்டுகிறேன்.  மற்ற கதாபாத்திரங்கள் எதுவும் வெளியில் தெரியக்கூடாது என்ற சூழ்நிலையை தான் இன்று நிலவுகிறது. ஆனால் பெண்களை முன்நிறுத்தும் கதாபாத்திரங்கள் ஸ்ட்ராங்காக இருக்கும் கதையில் நானும் நடிக்க வேண்டும் என்று நினைத்ததற்கு எனது பாராட்டுக்கள். இது போன்ற எதார்த்தமான கதாபாத்திரங்கள் கொண்ட ஒரு பத்து படங்கள் அவர் நடித்தார் என்றால் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத சக்தியாக உதயநிதி ஸ்டாலின் உருவாகுவார் என்றார். 

இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள தமன்னா ஒரு நல்ல ஆன்மா. சரஸ்வதி சம்மணம் போட்டு அவர் மனதில் அமர்ந்திருக்கிறார். நல்ல ஒரு கலையரசி  இந்த படத்தில் அப்படி ஒரு யதார்த்தமான ஒரு நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இவரை இத்தனை நாட்களாக கிளாமராக பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. தமன்னா இல்லை என்றால் இந்த படத்தை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. தமன்னாயுடைய கேரக்டர் ஒரு தைரியமான கதாபாத்திரம். உடனே எனக்கு ஞாபகம் வந்தது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தான். உடனே ஜெயலலிதா அவர்களின் நடை, உடை ,பார்வை போன்றவற்றை reference எடுத்தேன் இந்த கதாபாத்திரத்துக்கு ஒரு இன்ஸ்பிரேஷனாக ஜெயலலிதா அவர்களை எடுத்துக்கொண்டேன். இது படைப்பாளியின் சுதந்திரம் என்று நான் கருதுகிறேன் என்று தெரிவித்த அவர் என் படங்கள் மக்களை ஏமாற்றாது தவறான படங்களும் என்னால் எடுக்க முடியாது என்று தெரிவித்தார்.

தேவ் BMW ச

fridaycinemaa@gmail.com

Rate This Article:
NO COMMENTS

LEAVE A COMMENT