HomeTamilஹங்கேரி இசைக் கலைஞர்களுடன் இளையராஜாவின் பிரத்யேக இசை விருந்து

ஹங்கேரி இசைக் கலைஞர்களுடன் இளையராஜாவின் பிரத்யேக இசை விருந்து

ஹங்கேரி இசைக் கலைஞர்களுடன் இளையராஜாவின் பிரத்யேக இசை விருந்து

 

பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் நடக்கவிருக்கும் ‘இளையராஜா 75’ விழாவிற்காக மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 2-ஆம் தேதி மாலை 6 மணிக்கு ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோஹித் குத்து விளக்கு ஏற்றி விழவைத் துவக்கி வைக்கிறார். 6 மணிக்கு துவங்கும் நிகழ்ச்சி இரவு 10.30 மணி வரை நடக்கும். அதேபோல், பிப்ரவரி 3-ஆம் தேதி இளையராஜா ஹங்கேரியில் இருந்து வந்த இசைக் கலைஞர்களுடன் பிரம்மாண்டமாக நேரடி இசை நிகழ்ச்சி நடத்தவிருக்கிறார்.

மேலும், நிகழ்ச்சியின் முதல் நாளன்று (பிப்-2), மத்திய அமைச்சர் திரு.பொன்ராதாகிருஷ்ணன் அவர்களும் மாண்புமிகு துணை முதல்வர் திரு.ஓ.பன்னீர் செல்வம் அவர்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்கவிருக்கிறார்கள்.

1000 படங்களுக்கு மேல் இசையமைத்த மாமேதைக்கு எடுக்கும் பிரம்மாண்ட இசை திருவிழா திட்டமிட்டபடி சிறப்பாக நடைபெறும்.

ஹைதாராபாத், கேரளா மற்றும் எல்லா மாநிலங்களில் இருந்தும் நடிகர் நடிகைகள், இசையமைப்பாளர்கள், இயக்குநர்கள் என்று பல பிரபலங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள். டிக்கெட் பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக இந்நிகழ்ச்சி நடத்துவதில் பெருமை கொள்கிறோம். கடவுள் மீது நம்பிக்கை வைத்தால் அது வீணாகாது. நான் கடவுளாக நினைக்கிற நீதிபதியும் நீதித்துறையும் எங்களின் நேர்மைக்கு ஏற்றவாறு தீர்ப்பளித்ததில் மகிழ்ச்சி.

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு வருகிற மார்ச் 3-ஆம் தேதி நடைபெறும். அன்று கணக்கு வழக்குகளை சமர்ப்பிக்க வேண்டும் என்பது விதிமுறைகளிலேயே இருக்கிறது. அதன்படி அன்று சிறப்பு தணிக்கையாளரைக் கொண்டு அனைவரின் முன்னிலையிலும் கணக்கு வழக்கு ஒளிவு மறைவு இன்றி சமர்ப்பிக்கப்படும்.

இந்நிகழ்ச்சி நடத்துவதன் முக்கிய நோக்கம், அனைத்து உறுப்பினர்களும் பயனடைய வேண்டும் என்பது தான். இந்நிகழ்ச்சியில் ஒரு நாளைக்கு 16,800-லிருந்து 17,000 பேர் வரை கலந்து கொள்கிறார்கள்.

பிப்.2-ஆம் தேதி ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொள்வது உறுதியாகி உள்ளது. பிப். 3-ஆம் தேதி ரஜினிகாந்த், கமலஹாசன், சிரஞ்சீவி மற்றும் அனைத்து பிரபலங்களும் வருகிறார்கள். இரண்டு நாட்களும் சரிசமமாக வருவார்கள். மேலும், இளையராஜாவை நேரில் பார்க்காதவர்களும், அவரின் இசையை நேரில் கண்டு மகிழ ஆர்வத்துடன் டிக்கெட் வாங்கி செல்கின்றனர்.

பிரம்மாண்டமாக இந்நிகழ்ச்சி நடப்பதால் நெறிமுறைப்படி ஆட்சியாளர்களை அழைத்திருக்கிறோம். அதன்படி, மற்றவர்களுக்கும் முறையாக அழைப்பிதழ் சென்று சேரும்.

இந்நிகழ்ச்சி நடத்தக் கூடாது என்று வழக்குத் தொடுத்தவர்களும் கலந்து கொள்ளலாம். எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. தவறவிட்டவர்கள் சன் டிவியில் கண்டு மகிழலாம்.

முதல் நாள் நிகழ்ச்சியில் மற்ற கலைஞர்கள் பங்கேற்கிறார்கள். இரண்டாவது நாள் இளையராஜா ஹங்கேரி இசைக் கலைஞர்களுடன் பிரத்யேகமாக நிகழ்ச்சி நடத்துகிறார். ஹங்கேரி இசைக் கலைஞர்கள் இதற்கான ஒத்திகை பார்த்து வருகிறார்கள்.

இளையராஜாவை ‘அன்னக்கிளி’ படத்தில் அறிமுகப்படுத்தியவர்கள் இன்று இல்லை. ஆனால், அவரின் முதல் படத்திலிருந்து இன்று வரை அவருடன் பயணித்த அனைவருக்கும் அழைப்பு விடுத்திருக்கிறோம்.

“TFPC is happy tha
Lisaa 3D | Jukebox |

fridaycinemaa@gmail.com

Rate This Article:
NO COMMENTS

LEAVE A COMMENT