HomeUncategorized10 அரசு பள்ளிகளை தத்து எடுக்கும் ஆர்ஜே பாலாஜி

10 அரசு பள்ளிகளை தத்து எடுக்கும் ஆர்ஜே பாலாஜி

 

சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் எல்கேஜி. இந்த படத்தின் சக்சஸ் மீட் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் உணவு விடுதியில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ஜேகே ரித்தீஷ், நடிகை பிரியா ஆனந்த், ஆர்ஜே பாலாஜி, நாஞ்சில் சம்பத், பா .விஜய், நடிகர் ராம்குமார்  உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்

இந்த விழாவில் பேசிய நடிகர் ஆர்ஜே பாலாஜி,

மக்கள் மிகப் பெரிய சூப்பர் ஹீரோவாக  பார்த்தவர்தான் நடிகர் ராமராஜன் அந்த மாதிரி ஒரு இமேஜ் உள்ள நடிகர் வேண்டும் என்று தேடினோம் அவர்தான்  ஜே.கே. ரித்தீஷ் .
மேலும் ,நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் குடும்பத்தில் இருந்து வந்த ராம்குமார் அவர்களுக்கும் எனக்கும் அப்பா மகன் உறவு போன்றது. சிவாஜி production என்பது ஒரு 42 ஆண்டுகால பாரம்பரியமிக்க ஒரு தயாரிப்பு நிறுவனம் அந்த நிறுவனத்திற்காக ஒரு படம் பண்ண முடியுமா என்று ராம்குமார் அவர்கள் என்னிடம் கேட்டது ஒரு ஆசிர்வாதமாகவே  நான் பார்க்கிறேன் என்றார்.

40 ஆண்டு காலமாக அரசியலில் இருந்த ஒருவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வேறொரு கலர் இருந்தது அந்த கலரை இந்த படம் துடைத்து விட்டது என்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. மிகவும் நல்ல மனிதர் அவரை தப்பாக புரிந்து கொண்டது சமூகம். என் வாழ்க்கையில் நான் பார்த்த வெள்ளந்தியான மனிதர்களில் இவரும் ஒருவர் இன்னும் அவர் அதிக படங்களில் நடிக்க வேண்டும் நாகர்கோவிலில் நான்கு ஏக்கர் நிலம் வாங்கி போடுங்கள் இதன் பிறகாவது சம்பாதிக்க கற்றுக் கொள்ளுங்கள் என்று நாஞ்சில் சம்பத்துக்கு ஐடியா கொடுத்தார் .

 

எல்கேஜி வெளியான பிறகு 4 பெரிய கம்பெனிகள் என்னை படம் பண்ண அணுகினார்கள். ஆனால், என்னை யாரென்று தெரியாத போது என்னை நம்பி படம் கொடுத்த வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் கம்பெனிக்கு அடுத்த படத்தை நான் செய்ய விரும்புறேன் என்று தெரிவித்தார்.

மேலும் கஜா புயல் பாதிப்பின் போது என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. ஏனென்றால், அப்பொழுது எல் கே ஜி படத்தின் பணிகளில் ஈடுபட்டிருந்தேன். தற்போது, அதனை ஈடு செய்யும் விதமாக இந்த படத்தில் வரும் லாபத்தை கொண்டு டெல்டா பகுதியில் பாதிக்கப்பட்ட 10 அரசு பள்ளிகளை தத்து எடுத்து தனியார் பள்ளியில் உள்ள அனைத்து வசதிகளையும் இந்த பள்ளியில் செய்து கொடுக்க உள்ளோம் என்று தெரிவித்தார்.

நடிகை பிரியா ஆனந்த் பேசும்போது,  நான் ரொம்ப ஆசீர்வதிக்கப்பட்ட தைப் போன்று உணர்கிறேன் கடந்த சில வருடங்களாக தமிழில் அதிகமாக படங்களில் நடிக்கவில்லை. ஆனால் மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பெரிய வெற்றி படங்களில் நடித்துள்ளேன்.  தமிழில் நல்ல பெயர் இருந்தாலும் படங்கள் பண்ண முடியவில்லை என்ற குறை இருந்தது இந்த படத்தில் நடித்ததன் மூலம் அது அந்தக் குறையும் நீங்கிவிட்டது என்று தெரிவித்தார்.

விழாவில் பேசிய நாஞ்சில் சம்பத்,

நான் மிகவும் பெருமிதமான மனநிலையில் உங்கள் முன் நின்று கொண்டிருக்கிறேன். இப்படி ஒரு இடத்திற்கு வருவேன் என்று நான் கனவில்கூட நினைத்ததும் இல்லை ஆசைப்பட்டதும் இல்லை. ஒருநாள்  பாலாஜியும் அவர் நண்பர்களும் என்னிடம் வந்து நடிக்கிறீர்கள் என்று கேட்டார்கள். எனக்கு நடிக்கத் தெரியும்  என்று நீங்கள் நம்புகிறீர்களா என்று கேட்டேன் நீங்கள் வந்தால் போதும் என்று கூறினார்கள். 

சினிமாக்காரர்கள் என்றால் தலைக்கனம் பிடித்தவர்கள் என்று நினைத்திருந்தேன். நானும் தலைக்கனம் பிடித்தவன் தான் இருவருக்குமிடையே முட்டிக்கொள்ளும் என்று நினைத்தேன். ஆனால், அனைவரும் இயல்பாக பழகினார்கள். சூட்டிங்கில்  இதுவரை நான் சாப்பிடாத உணவு வகைகள் எல்லாம் சாப்பிட்டேன். இந்த உணவுக்காகவே தினமும் ஷூட்டிங் இருக்க வேண்டும் என்று எண்ண தோன்றுகிறது என்றார். இப்போது நான் கொஞ்சம் உயரம் ஆகிவிட்டது போன்று உணர்கிறேன் எல்கேஜி படம் அந்த உயரத்தை அதிகரித்து கொடுத்துள்ளது என்றார்

எனக்கு நண்பர்கள் கிடையாது நான் யாரிடமும் நெருங்கி பழக மாட்டேன். எப்பொழுதும் எழுதுவது, படிப்பதுமாக இருந்த எனக்கு இப்படி ஒரு உலகத்தில் பிரவேசிக்க வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன். அதிகாலை 5 மணிக்கு ரோகினி திரையரங்கில் படம் பார்த்துவிட்டு வெளியே வந்தபோது இளைஞர்கள் அளித்த வரவேற்பை கண்டு  அன்று  புதிதாய் பிறந்ததைப் போல் நான் உணர்ந்தேன். அதன்பிறகு எனது கிராமத்திற்கு சென்ற போது எனது 32 ஆண்டு கால பொது வாழ்வில் இல்லாத வரவேற்பை கண்டு  கண் கலங்கி விட்டேன் ஒரு கிராமத்தில் பிறந்த நான் இப்போது சினிமாவில் நடித்து விட்டேன் இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த அவர்களுக்கு நன்றி

FOLLOW US ON:
Arya-Sayyeshaa weddi

fridaycinemaa@gmail.com

Rate This Article:
NO COMMENTS

LEAVE A COMMENT